பஸ்சில் நகை திருட முயன்ற பெண் கைது
பஸ்சில் நகை திருட முயன்ற பெண் கைது
பஸ்சில் நகை திருட முயன்ற பெண் கைது
ADDED : ஜூலை 27, 2024 12:31 AM
தர்மபுரி: கிருஷ்ணகிரி மாவட்டம், முல்லை நகரை சேர்ந்தவர் ஆனந்தி, 24; இவர் நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த, அனுமந்தபுரத்தில் கோவில் விழாவிற்கு வந்தார்.
பின்னர் மாலை, 4:00 மணிக்கு பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஓசூர் செல்லும் பஸ்சில் ஏற முயன்றார். அப்போது, அவருடைய பையில் இருந்த நகையை திருட முயற்சி செய்த கோவையை சேர்ந்த வினோதா, 30, என்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்து பாலக்கோடு போலீசில் ஒப்படைத்தனர்.