ADDED : ஜூலை 27, 2024 12:31 AM
கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த போளையம்பள்ளியை சேர்ந்த, 20 வயது மாணவி அரூர் அரசு கல்லுாரியில் பி.ஏ., மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
கடந்த, 24ல் காலை, 8:30 மணிக்கு கல்லுாரிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. மாணவியின் தந்தை அளித்த புகார்படி கம்பைநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.