ADDED : செப் 02, 2025 01:33 AM
அரூர்;அரூர் அடுத்த நரிப்பள்ளியில், நாம் தமிழர் கட்சி சார்பில், நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. அரூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் திலீபன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக், மாநில கொள்கை பரப்பு செயலாளர் அருள் இனியன், மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வி தமிழமுது உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.