/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ செனாக்கல் தடுப்பணை திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல் செனாக்கல் தடுப்பணை திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்
செனாக்கல் தடுப்பணை திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்
செனாக்கல் தடுப்பணை திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்
செனாக்கல் தடுப்பணை திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜூன் 20, 2025 01:24 AM
மொரப்பூர், தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியம் ஜடையம்பட்டியில், மா.கம்யூ., கட்சி சார்பில் நடந்த பிரசாரத்திற்கு ஒன்றிய செயலாளர் தங்கராசு தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் குமார், மாவட்ட செயலாளர் சிசுபாலன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், தர்மபுரி மாவட்டத்தில், காவிரி உபரிநீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதேபோல், கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்று திட்டம் மற்றும் செனாக்கல் தடுப்பணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தர்மபுரி - மொரப்பூர் ரயில்பாதை இணைப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு தர்மபுரி மாவட்ட மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். தொடர்ந்து, ஆர்.கோபிநாதம்பட்டி, போளையம்பள்ளி, பொம்பட்டி உள்ளிட்ட
இடங்களில் பிரசார கூட்டம் நடந்தது.