/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பைக் -- டிப்பர் லாரி மோதல் மாணவர் உட்பட இருவர் பலி பைக் -- டிப்பர் லாரி மோதல் மாணவர் உட்பட இருவர் பலி
பைக் -- டிப்பர் லாரி மோதல் மாணவர் உட்பட இருவர் பலி
பைக் -- டிப்பர் லாரி மோதல் மாணவர் உட்பட இருவர் பலி
பைக் -- டிப்பர் லாரி மோதல் மாணவர் உட்பட இருவர் பலி
ADDED : ஜூன் 20, 2025 01:36 AM

அதியமான்கோட்டை:நல்லம்பள்ளி அருகே, பைக் மீது டிப்பர் லாரி மோதி பிளஸ் 2 மாணவர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
தர்மபுரி மாவட்டம், நாகாலம்மன் கோம்பையைச் சேர்ந்தவர் கார்த்திக், 21; கட்டட மேஸ்திரி. அதே ஊரை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் வெற்றிவேல், 19. இருவரும், சொந்த வேலையாக நல்லம்பள்ளிக்கு, நாகாலம்மன் கோம்பையில் இருந்து, யமஹா ஆர் 15 பைக்கில், நேற்று காலை 10:00 மணிக்கு -முத்தம்பட்டி சாலை வழியாக சென்றனர்.
பூதனஹள்ளி கிராம எல்லை அருகே, எதிரே மாட்லாம்பட்டியில் இருந்து பொம்மிடி-க்கு 'எம்-சாண்ட்' ஏற்றி வந்த டிப்பர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது.
இதில் பைக்கில் வந்த கார்த்திக், வெற்றிவேல் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதியமான்கோட்டை போலீசார், இருவரது உடலையும் மீட்டு, தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.