/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மூதாட்டி வெட்டிக்கொலை உடல் கிடைக்காததால் சிக்கல் மூதாட்டி வெட்டிக்கொலை உடல் கிடைக்காததால் சிக்கல்
மூதாட்டி வெட்டிக்கொலை உடல் கிடைக்காததால் சிக்கல்
மூதாட்டி வெட்டிக்கொலை உடல் கிடைக்காததால் சிக்கல்
மூதாட்டி வெட்டிக்கொலை உடல் கிடைக்காததால் சிக்கல்
ADDED : செப் 17, 2025 03:51 AM
அரூர்:மூதாட்டியை கொலை செய்ததாக தொழிலாளி சரணடைய, அவர் சொன்ன இடத்தில் உடல் கிடைக்காததால் போலீசார் திடுக்கிட்டனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சிட்லிங்கை சேர்ந்தவர் விஜயகுமார், 42; கூலி தொழிலாளி. இவர், இரு ஆண்டுகளுக்கு முன், உறவினரான சேலம் மாவட்டம், காக்கம்பாடியை சேர்ந்த வெள்ளச்சி, 63, என்பவரிடம், 10,000 ரூபாய் கடன் வாங்கினார். திருப்பி கொடுக்கவில்லை.
செப்., 5ல் விஜயகுமார் வீட்டிற்கு வந்த வெள்ளச்சி, ஏழு நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. வெள்ளச்சி பேத்தி தேவி, 24, புகாரின்படி, கோட்டப்பட்டி போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், வேலுார் மாவட்டம், பாகாயம் போலீஸ் ஸ்டேஷனில், வெள்ளச்சியை வெட்டி கொன்றதாக, விஜயகுமார் சரணடைந்தார். கோட்டப்பட்டி போலீசார் விஜயகுமாரிடம் விசாரித்தனர்.
வெள்ளச்சியின் உடலை மீட்க, நேற்று காலை வனப்பகுதிக்கு விஜயகுமாருடன் போலீசார் சென்ற போது, அங்கு வெள்ளச்சி உடல் கிடைக்கவில்லை. கொலை நடந்த இடம் குறித்து, விஜயகுமார் முன்னுக்கு பின் முரணாக கூறியதால், உடலை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.