/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/துப்பாக்கி சுடுதல் நினைவூட்டல் போலீசாருக்கு பயிற்சி முகாம்துப்பாக்கி சுடுதல் நினைவூட்டல் போலீசாருக்கு பயிற்சி முகாம்
துப்பாக்கி சுடுதல் நினைவூட்டல் போலீசாருக்கு பயிற்சி முகாம்
துப்பாக்கி சுடுதல் நினைவூட்டல் போலீசாருக்கு பயிற்சி முகாம்
துப்பாக்கி சுடுதல் நினைவூட்டல் போலீசாருக்கு பயிற்சி முகாம்
ADDED : ஜன 07, 2024 10:45 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில், 1,500 போலீசார் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, துப்பாக்கி சுடுதல் நினைவூட்டல் பயிற்சி ஆண்டுதோறும் நடக்கும். அதன்படி துப்பாக்கி சுடுதல் நினைவூட்டல் பயிற்சி, நேற்று காலை கடத்துார் அடுத்த ஒடசல்பட்டி கூட்ரோட்டிலுள்ள மலைப்பகுதியில், ஆயுதப்படை டி.எஸ்.பி., சத்யமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் செல்வமணி மேற்பார்வையில் எஸ்.ஐ., சின்னசாமி குழுவினர், போலீசாருக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும் இப்பயிற்சி முகாமில் தினமும், 100 முதல், 150 போலீசாருக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் காவல்துறையில் பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரகங்கள், அந்த துப்பாக்கிகளை பயன்படுத்தும் முறை குறித்து, பயிற்சி அளிக்கப்
படுகிறது.
ஒவ்வொரு போலீசாருக்கும், 3 சுற்றுகளில், 15 குண்டுகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் ஒவ்வொருவரும், எத்தனை குண்டுகளை உரிய இலக்கில் சுடுகிறார்கள் என்பது குறித்தும், கணக்கீடு செய்யப்படுகிறது. துப்பாக்கி சுடுதலில், அதிக புள்ளிகள் பெறும் சிறந்த போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி.,யால்
பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இந்த துப்பாக்கி சுடுதல் நினைவூட்டல் பயிற்சியில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த போலீசார், ஆர்வத்துடன் பயிற்சி பெற்றனர்.