/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தொப்பூர் கணவாய் 4 வாகன விபத்தில் பலி 5 ஆக உயர்வுதொப்பூர் கணவாய் 4 வாகன விபத்தில் பலி 5 ஆக உயர்வு
தொப்பூர் கணவாய் 4 வாகன விபத்தில் பலி 5 ஆக உயர்வு
தொப்பூர் கணவாய் 4 வாகன விபத்தில் பலி 5 ஆக உயர்வு
தொப்பூர் கணவாய் 4 வாகன விபத்தில் பலி 5 ஆக உயர்வு
ADDED : பிப் 06, 2024 09:52 AM
தர்மபுரி
: தொப்பூர் கணவாய் பகுதியில் நடந்த விபத்தில், இறந்தவர்கள் எண்ணிக்கை, 5 ஆக உயர்ந்தது.
தர்மபுரி
மாவட்டம், தொப்பூர் கணவாய், தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில்
கடந்த 24, மாலை, 5:30 மணியளவில் விபத்து ஏற்பட்டது. பெங்களூருவில் இருந்து,
திருப்பூர் அடுத்த காங்கேயத்துக்கு நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்த
லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற இரண்டு கார்,
பெயின்ட் பவுடர் ஏற்றி வந்த லாரி, கன்டெய்னர் லாரி என, அடுத்தடுத்து நான்கு
வாகனங்களில் மோதியது. இதில் லாரி, கார் தீப்பிடித்து எரிந்தது.
தீப்பிடித்த
காரில் இருந்த அரியலுார், கீழ்வரப்பங்குறிச்சியை சேர்ந்த ஆரோக்கிய ஜெனி,
32, விமல்குமார், 30, அவரது மனைவி மதி அனுக்ஷா, 25, மஞ்சுளா, 50, ஆகியோர்
உடல் கருகி இறந்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த
லாரி டிரைவர் ஸ்ரீதர், 25, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அவருடன்
சேர்த்து, தொப்பூர் கணவாய் விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை, 5 ஆக
உயர்ந்துள்ளது.