/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தக்காளி விலையில் உயர்வு ஒரு கிலோ ரூ.32க்கு விற்பனை தக்காளி விலையில் உயர்வு ஒரு கிலோ ரூ.32க்கு விற்பனை
தக்காளி விலையில் உயர்வு ஒரு கிலோ ரூ.32க்கு விற்பனை
தக்காளி விலையில் உயர்வு ஒரு கிலோ ரூ.32க்கு விற்பனை
தக்காளி விலையில் உயர்வு ஒரு கிலோ ரூ.32க்கு விற்பனை
ADDED : ஜூலை 04, 2025 01:32 AM
தர்மபுரி, தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி, 32 ரூபாய் என விற்பனையாது.
தர்மபுரி மாவட்டத்தில், ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்கின்றனர். சந்தைக்கு தக்காளி வரத்து தொடர்ந்து வந்ததால் அதன் விலையில் உயர்வு ஏற்படவில்லை.
இந்நிலையில், சந்தைக்கு வரத்து குறைந்துள்ள நிலையில், தர்மபுரி உழவர் சந்தையில் கடந்த, ஒன்றாம் தேதி, ஒரு கிலோ தக்காளி, 25 ரூபாய் எனவும், நேற்று முன்தினம், 26 ரூபாய் எனவும் விற்ற நிலையில் நேற்று, 32 ரூபாய் என விலை உயர்ந்தது. தக்காளி வரத்தை பொறுத்து, அதன் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.