ADDED : ஜூலை 04, 2025 01:33 AM
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டியில், சக்தி வாராஹி சமேத உன்மத்த பைரவர் கோவிலில் ஆஷாட நவராத்திரியையொட்டி, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
வேதமந்திரம் முழங்க, யாக பூஜை நடத்தப்பட்டது. சுவாமிக்கு, அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்து திருக்கல்யாணம் நடந்தது. இதை, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.