/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வனத்தில் மூங்கில் வெட்டிய மூவருக்கு ரூ.30,000 அபராதம் வனத்தில் மூங்கில் வெட்டிய மூவருக்கு ரூ.30,000 அபராதம்
வனத்தில் மூங்கில் வெட்டிய மூவருக்கு ரூ.30,000 அபராதம்
வனத்தில் மூங்கில் வெட்டிய மூவருக்கு ரூ.30,000 அபராதம்
வனத்தில் மூங்கில் வெட்டிய மூவருக்கு ரூ.30,000 அபராதம்
ADDED : ஜூன் 16, 2025 03:33 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை காப்புக்காடு, அம்மா குட்டை ஆலமர சராக பகுதியில், கடந்த, 14ல் தீர்த்த-மலை வனத்துறையினர் ரோந்து சென்றனர்.
அப்போது, பையர் நாயக்கன்பட்டியை சேர்ந்த பச்சியப்பன், 60, சேட்டு, 61, தேவராஜ், 58, ஆகிய, மூவரும் கொடுவாள்களுடன் அத்துமீறி நுழைந்து, பச்சை மூங்கில்களை வெட்டி, பிளந்து தப்பைகளாக மாற்றி, படல்கள் செய்து கொண்டிருந்தனர். அவர்களை வனத்து-றையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் மூவருக்கும், தலா, 10,000 ரூபாய் வீதம் என, மொத்தம், 30,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தர-விட்டார்.