/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/கள்ளச்சாராய கடத்தலை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணிகள்ளச்சாராய கடத்தலை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணி
கள்ளச்சாராய கடத்தலை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணி
கள்ளச்சாராய கடத்தலை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணி
கள்ளச்சாராய கடத்தலை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணி
ADDED : ஜூன் 21, 2024 07:19 AM
அரூர்: கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக, தர்மபுரி மாவட்ட எல்லைப்பகுதியில், கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க, போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களிலுள்ள கல்வராயன் மலை, கருமந்துறை ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது.
அங்கிருந்து, தர்மபுரி மாவட்ட எல்லையிலுள்ள கோட்டப்பட்டி, ஏ.கே.தண்டா, சிட்லிங், நரிப்பள்ளி, தீர்த்தமலை உள்ளிட்ட, கிராமங்களுக்கு கள்ளச்சாராயம் கடத்தி வரப்பட்டு, பாக்கெட்டுகள் மூலம் விற்பனை நடக்கிறது.கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பவர்கள் மீது கோட்டப்பட்டி போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதிலும் கள்ளச்சாராயம் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த, 37 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தர்மபுரி மாவட்ட எல்லைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் பணியில், தர்மபுரி மதுவிலக்கு டி.எஸ்.பி., ரமேஷ் தலைமையில், நேற்று போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அதேபோல், அரூர் தனிப்படை போலீசார் மற்றும் கோட்டப்படி போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.