/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்க கலெக்டர் அறிவுறுத்தல்குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்க கலெக்டர் அறிவுறுத்தல்
குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்க கலெக்டர் அறிவுறுத்தல்
குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்க கலெக்டர் அறிவுறுத்தல்
குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்க கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 21, 2024 07:19 AM
அரூர்: 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி நேற்று, 2வது நாளாக, அரூர் தாலுகாவில் பல்வேறு இடங்களில் நேற்று ஆய்வு செய்தார்.அரூர் டவுன் பஞ்., அலுவலகத்தில் துாய்மை பணியாளர்கள் வருகை மற்றும் குடிநீர் வினியோகம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, கோவிந்தசாமி நகரில், 40.75 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்காவில் ஆய்வு செய்ததுடன், மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார். பின், அக்ரஹாரம் பஞ்., வெளாம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், முதல்வரின் காலை உணவு திட்டத்தில், உணவு சமைக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் இருப்பு, தரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் சாந்தி மாணவ, மாணவியருக்கு தரமான உணவு சமைத்து, உரிய நேரத்தில் பரிமாற அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.