/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தர்மபுரியில் முதல்வர் பங்கேற்கும் விழா மேடையை கலெக்டர் ஆய்வுதர்மபுரியில் முதல்வர் பங்கேற்கும் விழா மேடையை கலெக்டர் ஆய்வு
தர்மபுரியில் முதல்வர் பங்கேற்கும் விழா மேடையை கலெக்டர் ஆய்வு
தர்மபுரியில் முதல்வர் பங்கேற்கும் விழா மேடையை கலெக்டர் ஆய்வு
தர்மபுரியில் முதல்வர் பங்கேற்கும் விழா மேடையை கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூலை 09, 2024 06:01 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை துவக்கி வைக்க வரும், 11ம் தேதி தர்மபுரிக்கு முதல்வர் ஸ்டாலின் வர உள்ளார். நிகழ்ச்சி, பாளையம்புதுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில், தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஊரக பகுதிகளுக்கு, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை துவக்கி வைத்து, பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதற்கான பாதுகாப்பு பணிகளில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்ட போலீசார் ஈடுபடுகின்றனர். நிகழ்ச்சி நடக்கும் விழா மேடை அமைக்கும் பணி, கடந்த ஒருவாரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், மேடை அமைத்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு பணிகளை நேற்று, மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார். அப்போது, தர்மபுரி எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.