ADDED : ஜூலை 09, 2024 06:04 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட நடப்பனஹள்ளி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு மைய சமையலராக லலிதா, 42, என்பவர் பணிபுரிந்து வந்தார்.
கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த குழுவிற்கு இடைத்தரகராக செயல்பட்டதால், கடந்த மாதம், 28 அன்று பென்னாகரம் போலீசார் கைது செய்தனர். லலிதா சிறையில் இருப்பதால், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.