/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மழையால் சாய்ந்த கரும்புகள்:சாகுபடி விவசாயிகள் கவலை மழையால் சாய்ந்த கரும்புகள்:சாகுபடி விவசாயிகள் கவலை
மழையால் சாய்ந்த கரும்புகள்:சாகுபடி விவசாயிகள் கவலை
மழையால் சாய்ந்த கரும்புகள்:சாகுபடி விவசாயிகள் கவலை
மழையால் சாய்ந்த கரும்புகள்:சாகுபடி விவசாயிகள் கவலை
ADDED : செப் 15, 2025 01:42 AM
அரூர்;அரூர் பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையால், கரும்புகள் கீழே சாய்ந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடந்த ஒரு வாரத்திற்கு முன், பரவலாக மழை பெய்தது. இதனால், வயல்களில் உள்ள கரும்புகள் கீழே சாய்ந்தன.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான, கீரைப்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, வள்ளிமதுரை, அச்சல்வாடி, ஒடசல்பட்டி, கூக்கடப்பட்டி, பேதாதம்பட்டி, பறையப்பட்டி புதுார், பொய்யப்பட்டி, கே.வேட்ரப்பட்டி, சோரியம்பட்டி, தொட்டம்பட்டி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில், 3,500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் கரும்பு நடவு செய்துள்ளனர்.
இப்பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள கரும்புகள், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் தனியார் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இன்னும், 3 மாதங்களில் அறுவடை செய்யவிருக்கும் நிலையில், கடந்த வாரம் பெய்த மழையால் கரும்புகள் கீழே சாய்ந்தன. இதனால், கரும்புக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளதுடன், எலிகள் அதிகளவில் கரும்பை கடித்து நாசப்படுத்தும். இன்னும், 3 மாதங்கள் கழித்து, அறுவடை செய்தால், கரும்பின் எடை மற்றும் பிழிதிறன் அதிகரிப்பதுடன், நல்ல விலை கிடைக்கும். முன்கூட்டியே அறுவடை செய்தால், கரும்பின் எடை குறைவதுடன், விலையும் குறைவாக கிடைக்கும். இதனால், விவசாயிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.