Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 'ஓரணியில் தமிழ்நாடு' மூலம் 2.23 லட்சம் உறுப்பினர் சேர்ப்பு

'ஓரணியில் தமிழ்நாடு' மூலம் 2.23 லட்சம் உறுப்பினர் சேர்ப்பு

'ஓரணியில் தமிழ்நாடு' மூலம் 2.23 லட்சம் உறுப்பினர் சேர்ப்பு

'ஓரணியில் தமிழ்நாடு' மூலம் 2.23 லட்சம் உறுப்பினர் சேர்ப்பு

ADDED : செப் 15, 2025 01:41 AM


Google News
தர்மபுரி:தர்மபுரி, தி.மு.க., அலுவலகத்தில் நேற்று, கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.பி.,யுமான மணி நிருபர்களிடம் கூறியதாவது:

தர்மபுரி மாவட்டத்தில், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற இயக்கம் கடந்த, 45 நாளாக நடந்து வந்தது. தமிழக முதல்வரின் அறிவிப்பின் படி, தர்மபுரி கிழக்கு மாவட்டம், தர்மபுரி சட்டசபை தொகுதியில் உள்ள, 308 ஓட்டுச்சாவடிகளில், 1,15,093 லட்சம் உறுப்பினர்கள், பென்னாகரம் சட்டசபை தொகுதியிலுள்ள, 296 ஓட்டுச்சாவடியில், 1,08,828 என, 604 ஓட்டுசாவடிகளில், 2,23,921 லட்சம் உறுப்பினர்கள், தி.மு.க.,வில் இணைந்துள்ளனர்.

அண்ணா பிறந்தநாளில் தர்மபுரி கிழக்கு மாவட்டத்திலுள்ள, 604 ஓட்டுசாவடிகளில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடக்கிறது. செப்., 20, 21ல், 'ஓரணியில் தமிழ்நாடு' மாவட்ட அளவிலான பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.

அப்போது, நகர தலைவர் நாட்டான் மாது, ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், மல்லமுத்து உட்பட பலர் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us