/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மின்தடை குறித்த எஸ்.எம்.எஸ்.,: குழப்பத்தில் பொதுமக்கள்மின்தடை குறித்த எஸ்.எம்.எஸ்.,: குழப்பத்தில் பொதுமக்கள்
மின்தடை குறித்த எஸ்.எம்.எஸ்.,: குழப்பத்தில் பொதுமக்கள்
மின்தடை குறித்த எஸ்.எம்.எஸ்.,: குழப்பத்தில் பொதுமக்கள்
மின்தடை குறித்த எஸ்.எம்.எஸ்.,: குழப்பத்தில் பொதுமக்கள்
ADDED : ஜூன் 07, 2024 12:19 AM
அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று காலை, 9:00 முதல், 11:00 மணி வரை, மின்தடை செய்யப்படும் என, நுகர்வோர்களுக்கு மொபைல் போன் மூலம், மின்வாரியம் சார்பில், எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டது.
வர்த்தக நிறுவனங்கள், விவசாயிகள், இல்லத்தரசிகள் என அனைத்து தரப்பினரும் மின்தடைக்கு ஏற்ப தங்களது பணிகளை மாற்றி அமைத்துக் கொண்டனர். இந்நிலையில் நேற்று அரூர் பகுதியில் மின் தடை செய்யப்படவில்லை.
இதனால் விவசாய நிலத்தில் பணிகளை மாற்றி அமைத்து இருந்த விவசாயிகள், இல்லத்தரசிகள் மற்றும் வர்த்தக நிறுவனத்தினர் குழப்பம் அடைந்தனர். மின்தடை குறித்து எஸ்.எம்.எஸ்., அனுப்பிய மின்வாரியம், அதனை ரத்து செய்த விபரத்தை முறையாக நுகர்வோர்களுக்கு தெரிவிக்கவில்லை.
வரும் நாட்களில் இது போன்ற குழப்பங்கள் ஏற்படாமல் இருக்க, மின்வாரியம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.