/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ஏரியில் ஆகாயதாமரை ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் வேண்டுகோள்ஏரியில் ஆகாயதாமரை ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் வேண்டுகோள்
ஏரியில் ஆகாயதாமரை ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் வேண்டுகோள்
ஏரியில் ஆகாயதாமரை ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் வேண்டுகோள்
ஏரியில் ஆகாயதாமரை ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் வேண்டுகோள்
ADDED : ஜூன் 07, 2024 12:19 AM
தர்மபுரி : தர்மபுரி அடுத்த பிடமனேரி ஏரியை ஆக்கிரமித்துள்ள, ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தர்மபுரி, இலக்கியம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட பிடமனேரியில், 35 ஏக்கர் பரப்பில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு, தர்மபுரி அடுத்த பதிகால்பள்ளம் ஏரியிலிருந்து, மழை காலங்களில் தண்ணீர் வரத்தாகிறது. இதன் மூலம், பிடமனேரியை சுற்றியுள்ள ஏராளமான விவசாய நிலங்கள் பாசன கால்வாய் மூலம் பயன்பெற்று வருகிறது. மேலும் ஏரியின் உபரிநீர், பொதுப் பணிப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, தர்மபுரி ராமக்காள் ஏரிக்கும் வருவதால், இதிலிருந்து வெளியேறும் தண்ணீரால் பல ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
இந்த ஏரியில், அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் நேரடியாக கலக்கிறது. இதனால், ஏரியை சுற்றியுள்ள குடியிருப்பு ஆழ்துளை கிணறுகளில் சாக்கடை நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஏரியில் நடக்கும் மீன்பிடிப்பு ஏலம் மூலம், பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது.இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளால் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தும், பாசன கால்வாயில் படர்ந்து தண்ணீர் செல்ல வழியில்லாமலும் உள்ளது. எனவே, விவசாயிகளின் நலன்கருதி ஏரியில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டுமென, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.