/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/துாய்மை பணியாளர்கள் குடியிருப்பு: ஆணைய தலைவர் நேரில் ஆய்வுதுாய்மை பணியாளர்கள் குடியிருப்பு: ஆணைய தலைவர் நேரில் ஆய்வு
துாய்மை பணியாளர்கள் குடியிருப்பு: ஆணைய தலைவர் நேரில் ஆய்வு
துாய்மை பணியாளர்கள் குடியிருப்பு: ஆணைய தலைவர் நேரில் ஆய்வு
துாய்மை பணியாளர்கள் குடியிருப்பு: ஆணைய தலைவர் நேரில் ஆய்வு
ADDED : ஜூலை 05, 2024 12:13 AM
தர்மபுரி: தர்மபுரி, நகராட்சிக்கு உட்பட்ட குமாரசாமிப்பேட்டையிலுள்ள துாய்மை பணியாளர்கள் குடியிருப்பை, தேசிய துாய்மை பணி-யாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் ஆய்வு செய்தார்.அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது:தர்மபுரி நகராட்சியில், துாய்மை பணியாளர்களுக்கு ஊதியம், நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகி-றதா என்பதையும், ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு, ஊதியம் முழுமையாக சென்றடைகிறதா என்பதையும் அலுவ-லர்கள் உறுதி செய்ய வேண்டும்.
துாய்மை பணியாளர்கள், பணி-களில் தொடர்ந்து ஈடுபடுவதால் தான் நாடும், நகரமும் சுத்தமா-கவும், சுகாதாரமாகவும் இருக்கிறது என்பதை, நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். துாய்மை பணியாளர்கள் மீது, துறை சார்ந்த அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி அவர்களின் கோரிக்கை-களை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். மேலும், அவர்-களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு தேவையான நடவடிக்கை-களை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஒரு பணியாளருக்கு தொகுப்பூதியத்தில் தற்காலிக இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணை, நகராட்சியில் பணிபு-ரிந்து ஓய்வு பெற்ற, 2 துாய்மை பணியாளர்களுக்கு தலா, 6.48 லட்சம் வீதம், 12.96 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்-கினார். நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், ஆர்.டி.ஓ., காயத்ரி உள்பட பலர் பங்கேற்றனர்.