ADDED : ஜூலை 05, 2024 12:13 AM
நல்லம்பள்ளி: மத்திய அரசின், துாய்மை இந்தியா மற்றும் ஆரோக்கிய வள-மான இந்தியா குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.தொடர்ந்து, இப்பள்ளி வளாகம் மற்றும் சிவாடியிலுள்ள எச்.பி.சி.எல்., நிறுவனம் உள்பட பல இடங்களில், 500க்கும் மேற்-பட்ட மாரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில், நிர்வாகிகள் கிஷோர், ராதாகிருஷ்ணன் மற்றும் சிவசங்கர், இப்பள்ளித் தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு, தேசிய பசுமைப்படை ஒருங்-கிணைப்பாளர் மகேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.