விபத்து ஏற்பட்ட பிரிவு சாலை மூடல்
விபத்து ஏற்பட்ட பிரிவு சாலை மூடல்
விபத்து ஏற்பட்ட பிரிவு சாலை மூடல்
ADDED : ஜூன் 27, 2025 01:29 AM
தர்மபுரி, தர்மபுரி அரசு மருத்துவமனை அருகே, கடந்த சில தினங்களுக்கு முன், விபத்து ஏற்பட்ட பிரிவு சாலை, கான்கிரீட் தடுப்பு கொண்டு மூடப்பட்டது.
சேலம்- -------- தர்மபுரி நெடுஞ்சாலையில், தர்மபுரி டவுன் அரசு மருத்துவமனை அடுத்துள்ள, தங்கம் மருத்துவமனை பஸ் ஸ்டாப் பகுதியில், பிரிவு சாலை உள்ளது. இதை இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
கடந்த, 22 அன்று மாலை, தர்மபுரி நோக்கி அதிவேகமாக வந்த டிராக்டர் திடீரென பிரிவு சாலையில் திரும்பிய போது, அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதியதில், 10 பேர் காயமடைந்தனர். பிரிவு சாலையில் அபாயகரமான முறையில், வாகன ஓட்டிகள் தொடர்ந்து கடந்து வருவதால், விபத்து ஏற்படுவதை தடுக்க, அந்த பிரிவு சாலையை மூட, நெடுஞ்சாலை துறை முடிவு செய்தது. நேற்று முன்தினம், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கான்கிரீட் தடுப்புகளை கொண்டு, பிரிவு சாலையை மூடினர்.