/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ நெடுஞ்சாலை ஊழியர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நெடுஞ்சாலை ஊழியர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நெடுஞ்சாலை ஊழியர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நெடுஞ்சாலை ஊழியர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நெடுஞ்சாலை ஊழியர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 27, 2025 01:29 AM
தர்மபுரி, கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை அலுவலர் சங்கத்தினர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், நெடுஞ்சாலை துறையிலுள்ள, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். நீண்ட காலமாக வெளியிடப்படாமல் உள்ள இளநிலை உதவியாளர், உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்களது முதுநிலை பட்டியலை உடனே வெளியிட வேண்டும். நெடுஞ்சாலை துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் பதவி உயர்வுக்கான பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு, பதவி உயர்வுகளை வழங்க வேண்டும். விடுமுறை நாட்களில் பணி செய்ய நிர்பந்தம் செய்வதை கைவிட வேண்டும். விடுமுறை நாட்களில் ஆய்வு கூட்டங்கள் நடத்துவதன் மூலம், ஊழியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் போக்கை, உயர் அலுவலர்கள் தவிர்க்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள்
வலியுறுத்தப்பட்டது.