/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பால் கொள்முதல் செய்ய அமுல் நிறுவனத்தை அனுமதிக்க கோரிக்கைபால் கொள்முதல் செய்ய அமுல் நிறுவனத்தை அனுமதிக்க கோரிக்கை
பால் கொள்முதல் செய்ய அமுல் நிறுவனத்தை அனுமதிக்க கோரிக்கை
பால் கொள்முதல் செய்ய அமுல் நிறுவனத்தை அனுமதிக்க கோரிக்கை
பால் கொள்முதல் செய்ய அமுல் நிறுவனத்தை அனுமதிக்க கோரிக்கை
ADDED : ஜூலை 27, 2024 12:30 AM
தர்மபுரி: ''பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைக்க, அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும்,'' என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில இளைஞரணி செயலாளர் உதயகுமார் கூறினார்.மேலும் அவர் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், தனியார் பால் நிறுவனங்கள் திட்டமிட்டு பால் கொள்முதல் விலையை குறைத்துள்ளனர்.
இதன் காரணமாக, பால் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். இதில், தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலையில், பாலில் எஸ்.என்.எப்., அளவு, 7.5 சதவீதம் இருந்தால், ஒரு லிட்டர் பாலுக்கு, 23 முதல், 24 ரூபாய் வரை வழங்குகின்றனர். ஆனால், அமுல் நிறுவனம் அதே தரமுள்ள பாலுக்கு, 40 முதல், 50 ரூபாய் வரை வழங்குகின்றனர். எனவே, பால் உற்பத்தியாளர்கள் பயன் பெற, தர்மபுரி மாவட்டத்தில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும். மேலும் தனியார் மற்றும் ஆவின் நிறுவனம் ஆகியவை அமுல் நிறுவனத்திற்கு நிகராக பால் விலையை உயர்த்த வேண்டும்.இவ்வாறு கூறினார்.