/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/கல்லுாரி மாணவிகளுக்கு சுகாதார மேலாண்மை பயிற்சிகல்லுாரி மாணவிகளுக்கு சுகாதார மேலாண்மை பயிற்சி
கல்லுாரி மாணவிகளுக்கு சுகாதார மேலாண்மை பயிற்சி
கல்லுாரி மாணவிகளுக்கு சுகாதார மேலாண்மை பயிற்சி
கல்லுாரி மாணவிகளுக்கு சுகாதார மேலாண்மை பயிற்சி
ADDED : ஜூலை 27, 2024 12:31 AM
ஏரியூர்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம், ஏழு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு, மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்து, பயிற்சி நடந்து வருகிறது.மகளிர் திட்ட இயக்குனர் பத்ஹீமுகம்மது நசீர் மற்றும் உதவி திட்ட அலுவலர் வெற்றிச்செல்வன் ஆகியோர், கல்லுாரிகளில் மாதவிடாய் சுகாதார மன்றம் மற்றும் அறிவு சார் மையம் அமைக்கும் விதம் குறித்து, ஒவ்வொரு கல்லுாரிக்கும், விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்த தலா, 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என கூறினர்.இதில், பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தர்மபுரி கல்லுாரி முதல்வர் கண்ணன், காரிமங்கலம் மகளிர் கல்லுாரி முதல்வர் ஜெயசீலன், பாலக்கோடு முதல்வர் தீர்த்தலிங்கம், பாப்பிரெட்டிப்பட்டி முதல்வர் ரவி, ஏரியூர் கல்லுாரி முதல்வர் நாகராஜன் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.கட்டுரை போட்டிகளை மாமரத்துப்பள்ளம் கல்லூரி முதல்வர் பாக்கியமணி, அரூர் கல்லூரி முதல்வர் மங்கையர்கரசி ஆகியோர் நடத்தினர்.
மாதவிடாய் கால சுகாதார மேலாண்மை, தன்சுத்தம், பயன்படுத்திய நாப்கின்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்துதல், சீரற்ற மாதவிடாய்க்கு தீர்வு குறித்து, மாவட்ட வளப்பயிற்றுனர் பெருமாள் பயிற்சியளித்தார். இதில், சினைப்பை, நீர்கட்டி பிரச்சனை, அதிக ரத்த போக்கு, மற்றும் மாணவிகளின் சந்தேகங்களுக்கு வட்டார வளப்பயிற்றுனர்கள் லாவண்யா, இந்துமதி, முபாரக் நிஷா ஆகியோர் விளக்கமளித்தனர். வட்டார இயக்க மேலாளர்கள் கலைச்செல்வி, அனுசுயா, சிவலிங்கம் அருண்குமார், ரமேஷ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.