/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பொது குடிநீர் குழாய் அமைக்க மறுப்பால் பொதுமக்கள் அவதிபொது குடிநீர் குழாய் அமைக்க மறுப்பால் பொதுமக்கள் அவதி
பொது குடிநீர் குழாய் அமைக்க மறுப்பால் பொதுமக்கள் அவதி
பொது குடிநீர் குழாய் அமைக்க மறுப்பால் பொதுமக்கள் அவதி
பொது குடிநீர் குழாய் அமைக்க மறுப்பால் பொதுமக்கள் அவதி
ADDED : பிப் 12, 2024 10:55 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பொ.மல்லாபுரம் பேரூராட்சி, 8வது வார்டில், தர்மபுரி மெயின் ரோடு, ரங்கநாதன் நகர் உள்ளது. இங்கு, 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குறிப்பாக ரங்கநாதன் நகரில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இம்மக்களுக்கு, பேரூராட்சி மூலம் பொது குழாய் அமைத்து, அதன் மூலம் இலவசமாக, ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் இதுவரை செய்யவில்லை. பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம், முறையிட்டும் பயனில்லை. குடிநீருக்கு, 13,000 ரூபாய் கட்டி, குடிநீர் இணைப்பு பெற்றுக்கொள்ள கூறுகின்றனர். இதனால், ஏழை மக்கள் பணம் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். பணம் கட்டாததால், பேரூராட்சி நிர்வாகமும் குடிநீர் வழங்க மறுத்து வருகிறது.
இது குறித்து, 8 வார்டு கவுன்சிலர் பழனி கூறியதாவது: தர்மபுரி மெயின் ரோட்டில், முனியப்பன் கோவில் வரை, பொது குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ரங்கநாதன் நகருக்கு பலமுறை கேட்டும், பணம் கட்ட வேண்டும், மக்களே சொந்த செலவில் பைப் வாங்கி போட்டு கொள்ள வேண்டுமென பேரூராட்சி நிர்வாகம் கூறுகிறது. இந்நிலையில், பொதுமக்கள் பைப் வாங்க முடியாமலும், பணம் கட்டாததால், குடிநீர் வழங்க, பேரூராட்சி நிர்வாகமும் மறுத்து வருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.