ADDED : ஜூன் 06, 2025 01:38 AM
பென்னாகரம், உலக சுற்றுச்சுழல் தினத்தையொட்டி, பென்னாகரம் நெடுஞ்சாலை துறை சார்பில், பென்னாகரம் - பாப்பாரப்பட்டி சாலையோரத்தில், 7,000 மரக்கன்றுகள் நடும் விழா நேற்று தொடங்கியது. பென்னாகரம் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் சிங்காரவேலன் தலைமை வகித்தார்.
பிக்கம்பட்டி முதல், நாகதாசம்பட்டி, பாப்பாரப்பட்டி வரையில் நெடுங்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. இதில், சாலை ஆய்வாளர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.