/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ விவசாயி தீக்குளித்து தற்கொலை முயற்சியால் எஸ்.பி., ஆபீஸ் நுழைவாயிலில் பேரிகார்ட் விவசாயி தீக்குளித்து தற்கொலை முயற்சியால் எஸ்.பி., ஆபீஸ் நுழைவாயிலில் பேரிகார்ட்
விவசாயி தீக்குளித்து தற்கொலை முயற்சியால் எஸ்.பி., ஆபீஸ் நுழைவாயிலில் பேரிகார்ட்
விவசாயி தீக்குளித்து தற்கொலை முயற்சியால் எஸ்.பி., ஆபீஸ் நுழைவாயிலில் பேரிகார்ட்
விவசாயி தீக்குளித்து தற்கொலை முயற்சியால் எஸ்.பி., ஆபீஸ் நுழைவாயிலில் பேரிகார்ட்
ADDED : ஜூன் 06, 2025 01:38 AM
தர்மபுரி, தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில், விவசாயி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதன் எதிரொலியாக, அலுவலக நுழைவாயிலில் பேரிகார்டு வைத்து அடைக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த ராஜாதோப்பு கிராமத்தை சேர்ந்த ஜெயராமன், 52, என்பவர் விவசாய தொழில் செய்து வருகிறார். தன்னிடம் பணம் வாங்கிக் கொண்டு திருப்பித் தர மறுத்த நபர் மீது புகார் அளிக்க
எஸ்.பி., அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் வந்துள்ளார்.
அப்போது, தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அருகிலிருந்தவர்கள் தீயை அணைத்து, அவரை உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு உடலில், 60 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து ஜெயராமனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எஸ்.பி., அலுவலக வளாகத்தில் விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நேற்று முதல், தர்மபுரி எஸ்.பி., அலுவலக பிரதான நுழைவாயில், முன் பேரிகார்டுகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. மேலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்திற்கு வருபவர்கள், தீவிரமாக கண்காணிக்கப்படுவதுடன், அனைவரையும் சோதனை செய்த பிறகே, உள்ளே செல்ல அனுமதிக்கப் படுகின்றனர்.