ADDED : ஜூன் 12, 2025 01:50 AM
சூளகிரி, சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், 370 மாணவர்கள், 380 மாணவியர் என மொத்தம், 750 பேர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் போதிய கழிப்பிட வசதி இல்லாததால், மாணவ, மாணவியர் சிரமப்பட்டு வருகின்றனர்.
அதனால் இப்பள்ளி தலைமையாசிரியை சாந்தி, வேப்பனஹள்ளி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., முனுசாமியிடம், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய கழிப்பிட வசதி செய்து தர வேண்டும் என மனு வழங்கினார். சூளகிரி, அ.தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் மாதேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.