ADDED : ஜூன் 24, 2024 07:15 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஒரு வாரத்திற்கு முன், ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்தது.
அதன் பிறகு தொடர்ந்து, மிதமான வெப்பநிலை நிலவி வந்தது. நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து, மாலை, 5:30 மணி முதல், தர்மபுரி, தொப்பூர், பாலக்கோடு, இண்டூர், பென்னாகரம், அதியமான்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த சாரல் மழையால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.