/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான்போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான்
போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான்
போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான்
போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான்
ADDED : ஜூன் 24, 2024 07:15 AM
தர்மபுரி : தர்மபுரி மாவட்ட போலீஸ் மற்றும் தடகள சங்கம் சார்பில், கள்ளசாராயம் மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான, விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்த, மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.தர்மபுரி மாவட்ட போலீஸ் மற்றும் மாவட்ட தடகள சங்கம் இணைந்து, கள்ளச்சாராயம் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களுக்கு எதிராக, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 5 கி.மீ., மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.
தர்மபுரி மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் மாவட்ட விளையாட்டரங்கம் முன், மாரத்தான் போட்டியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில், பள்ளி கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் ஆண்கள், பெண்கள் என, பலர் கலந்து கொண்டனர். மாவட்ட விளையாட்டரங்கத்தில் தொடங்கி, 4 ரோடு, கடைவீதி, பச்சியம்மன் கோவில், அரசு மருத்துவமனை வழியாக மீண்டும் விளையாட்டரங்கத்தில் முடிவடைந்தது. இதில், பெண்கள் பிரிவில், முதல் பரிசு சுபதா ஸ்ரீ, 2ம் பரிசு குமுதா, 3ம் பரிசு கீர்த்திகா மற்றும் ஆண்கள் பிரிவில், முதல் பரிசு லோகேஷ், 2ம் பரிசு அன்பரசு, 3ம் பரிசு நவீன்குமார் ஆகியோருக்கு தர்மபுரி மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், ஏ.டி.எஸ்.பி., ரமேஷ், தடகள அமைப்பு தலைவர் சரவணன், செயலாளர் அருவி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.