ADDED : ஜூலை 19, 2024 01:34 AM
கம்பைநல்லுார்: மத்திய, பா.ஜ., அரசு கொண்டு வந்துள்ள, 3 புதிய குற்றவியல் சட்டங்களை கைவிடக் கோரி, மா.கம்யூ., கட்சி சார்பில், கம்பை-நல்லுார் பஸ் ஸ்டாண்டில் நேற்று தெருமுனை கூட்டம் நடந்தது. வட்டச் செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார்.
வட்ட குழு உறுப்பினர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்து, சாலை போக்குவரத்து மாவட்ட செயலாளர் ஆனஸ்ட்ராஜ் ஆகியோர் பேசினர். நிர்வா-கிகள் பெருமாள், சுரேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரூர் பகுதியில் மழை
அரூர், ஜூலை 19-
அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்க-ளாக சாரல்மழை பெய்தது. இந்நிலையில் நேற்று மதியம், 3:00 முதல், 5:00 மணி வரை, அச்சல்வாடி, மோப்பிரிப்பட்டி, தொட்-டம்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.
இதனால், வயல்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. அரூரில் நான்கு ரோடு, திரு.வி.க., நகர் உள்ளிட்ட இடங்களில் சாலை-களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. நேற்று பெய்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.