/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிமாறிய காலை உணவில் பல்லிஅரசு பள்ளி மாணவர்களுக்கு பரிமாறிய காலை உணவில் பல்லி
அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிமாறிய காலை உணவில் பல்லி
அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிமாறிய காலை உணவில் பல்லி
அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிமாறிய காலை உணவில் பல்லி
ADDED : ஜூலை 25, 2024 01:43 AM
தர்மபுரி: நல்லம்பள்ளி அருகே, அரசு தொடக்கப்பள்ளியில், காலை உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு பரிமாறிய உணவில், பல்லி இருந்-ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த தேவரசம்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இதன் தலைமை ஆசிரியை பாக்-கியலட்சுமி. பள்ளியில், 1 - 5 ம் வகுப்பு வரை படிக்கும், 60 மாணவ, மாணவியருக்கு, காலை உணவு திட்டத்தில் உணவு வழங்கப்படுகிறது. நேற்று காலை வழக்கம் போல, 8:30 மணிக்கு, 3 சமையலர்கள் மாணவர்களுக்கு காலை உணவாக, உப்புமா சமைத்து பறிமாற தொடங்கினர். இதில், 60 மாணவ, மாணவி-யரில், 19 பேருக்கு உணவை பரிமாறிய நிலையில், உணவில் பல்லி இருந்தது தெரிந்து உணவு பரிமாறியதை நிறுத்தினர். உட-னடியாக, நல்லம்பள்ளி வட்டார மருத்துவ அலுவலர் வாசு-தேவன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் வந்து, உணவு சாப்பிட்ட, 19 மாணவ, மாணவியரை பரிசோதனை செய்து, ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கினர். தொடர்ந்து, மாணவர்கள் உடல் நலன் குறித்து பரிசோதனை செய்தனர்.
காலை உணவில் பல்லி விழுந்த தகவல் தெரிந்த குழந்தைகளின் பெற்றோர் பள்ளியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நல்லம்-பள்ளி பி.டி.ஓ., லோகநாதன், தாசில்தார் சிவக்குமார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து, நல்லம்பள்ளி வட்டார மருத்துவ அலுவலர் வாசு-தேவன் கூறுகையில்,''காலை உணவு சாப்பிட்ட, 19 மாணவர்-களை பரிசோதனை செய்ததில், யாருக்கும் பாதிப்பு ஏற்பட-வில்லை. உணவு சமைக்கும் போது, பல்லி விழுந்திருந்தால் அதன் உடல் சிதைந்திருக்கும். உணவு பறிமாறும்போது விழுந்-ததால், அது முழுமையாக இருந்தது. மாணவர்களுக்கு பாதிப்-பில்லை, நலமாக உள்ளனர்,'' என்றார்.
சம்பவம் குறித்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.