ADDED : ஜூலை 26, 2024 03:24 AM
அரூர்: அரூர் அடுத்த சிக்களூரை சேர்ந்தவர் ரவி, இவரது மனைவி சுவேதா, 19; இவருக்கு நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
108 அவசர கால ஆம்புலன்ஸ் வாகனத்தில் நரிப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின், அங்கிருந்து அரூர் அரசு மருத்துவம-னைக்கு வரும் வழியில், பையர்நாயக்கன்பட்டி வனப்பகுதியில் சுவேதாவிற்கு பிரசவ வலி அதிகமானதால், மருத்துவ உதவி-யாளர் சந்தோஷ்குமார், ஓட்டுனர் கார்த்திக் உதவியுடன், ஆம்பு-லன்சிலேயே சுவேதாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. பின் தாயும், சேயும் நரிப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். குடும்பத்தினர், ஊர் மக்கள் ஆம்புலன்ஸ் பணி-யாளர்களை பாராட்டினர்.