/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாயிகளுக்கு இடுபொருள் வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாயிகளுக்கு இடுபொருள்
வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாயிகளுக்கு இடுபொருள்
வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாயிகளுக்கு இடுபொருள்
வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாயிகளுக்கு இடுபொருள்
ADDED : செப் 23, 2025 01:50 AM
கிருஷ்ணகிரி, வேளாண் அறிவியல் மையம் சார்பில், விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி அடுத்த எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையம், புதிய சாகுபடி தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதன்படி, ஊத்தங்கரை தாலுகா மிட்டப்பள்ளி கிராமத்தில் விவசாயிகளை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இடுபொருட்களாக, மா மற்றும் கொள்ளு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்து, வேளாண் அறிவியல் மையத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகளை எடுத்துரைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட, 20 விவசாயிகளுக்கு தலா, 50 மாஞ்செடி, 100 பேருக்கு தலா, 5 கிலோ கொள்ளு விதைகளையும் வழங்கினார்.
வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர்கள் செந்தில்குமார் (வேளாண் விரிவாக்கம்), உதயன் (உழவியல்), கால்நடை மருத்துவர் ரமேஷ் (கால்நடை அறிவியல்), ஆகியோர், மா, கொள்ளு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சிகள் மற்றும் துாய்மை இயக்ககம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில், மண்ணகம் அறக்கட்டளை நிறுவனர் சுரேந்தர், இயக்குனர் அகில் மற்றும் மிட்டப்பள்ளி, பெரியதள்ளப்பாடி கிராமத்தை சார்ந்த, 120 விவசாயிகள் பங்கேற்றனர்.