/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு துறை செயல்விளக்கம் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு துறை செயல்விளக்கம்
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு துறை செயல்விளக்கம்
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு துறை செயல்விளக்கம்
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு துறை செயல்விளக்கம்
ADDED : செப் 23, 2025 01:50 AM
கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த சீமனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து, பர்கூர் தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம் அளித்தனர்.
பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை நிலைய அலுவலர் பழனி தலைமையில், வீரர்கள் ரமேஷ், அன்புமணி, கோகுல், சங்கர், அருண், பிரதாப், ஸ்ரீநாத், விவேகானந்தர் ஆகியோர், மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை கயிறு கட்டியும், படகு மூலம் மீட்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.
மேலும், பள்ளி விடுமுறை நாட்களில் மாணவ, மாணவியர் நீர்நிலை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பெற்றோர்களின் மேற்பார்வையில் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் மின்கம்பத்தின் அருகில் செல்வதையும் தவிர்க்க வேண்டும். 24 மணி நேரமும் பர்கூர் தீயணைப்பு துறையினருக்கு தாமதமின்றி தகவல் கொடுக்க, 101 மற்றும், 112 ஆகிய இலவச தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும், என்றனர்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.