/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ரத்னா நீர்த்துளி மினரல் வாட்டர் நல்லம்பள்ளியில் திறப்பு விழாரத்னா நீர்த்துளி மினரல் வாட்டர் நல்லம்பள்ளியில் திறப்பு விழா
ரத்னா நீர்த்துளி மினரல் வாட்டர் நல்லம்பள்ளியில் திறப்பு விழா
ரத்னா நீர்த்துளி மினரல் வாட்டர் நல்லம்பள்ளியில் திறப்பு விழா
ரத்னா நீர்த்துளி மினரல் வாட்டர் நல்லம்பள்ளியில் திறப்பு விழா
ADDED : ஜன 25, 2024 10:05 AM
நல்லாம்பள்ளி: ரத்னா நீர்த்துளி மினரல் வாட்டர் நிறுவன திறப்பு விழா நல்லம்பள்ளியில் நடந்தது. பா.ம.க., ஒன்றிய செயலாளர் அன்பு கார்த்திக் வரவேற்றார். துணை நிர்வாக இயக்குனர்கள் கிருஷ்ணம்மாள் சந்திரராசன், புவனேஸ்வரி, ரேவதி, பானுபிரியா முன்னிலை வகித்தனர்.
ரத்னா நிறுவனங்களின் தலைவர் ஹரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் ரத்னா நீர்த்துளி மினரல் வாட்டர் நிறுவனத்தை, தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து, ரத்னா நீர்த்துளி தயாரிப்பின் வாட்டர் பாட்டிலின் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பா.ம.க., முன்னாள் எம்.பி., செந்தில், நல்லம்பள்ளி சேர்மன் மகேஸ்வரி பெரியசாமி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம், பா.ம.க., மாநில நிர்வாகி சாந்தமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகன், புவனேஸ்வரி மூர்த்தி, மாரியம்மாள் முனிராஜ், கவுரம்மாள் அரிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் சோனியாகாந்தி வெங்கடேசன், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ரத்தினம்மாள் ஆறுமுகம் நன்றி கூறினார்.