/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ இ.ஆர்.கே., கலை கல்லுாரியில் இளங்கலை முதலாமாண்டு துவக்கம் இ.ஆர்.கே., கலை கல்லுாரியில் இளங்கலை முதலாமாண்டு துவக்கம்
இ.ஆர்.கே., கலை கல்லுாரியில் இளங்கலை முதலாமாண்டு துவக்கம்
இ.ஆர்.கே., கலை கல்லுாரியில் இளங்கலை முதலாமாண்டு துவக்கம்
இ.ஆர்.கே., கலை கல்லுாரியில் இளங்கலை முதலாமாண்டு துவக்கம்
ADDED : ஜூன் 30, 2025 04:17 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எருமியாம்பட்டி இ.ஆர்.கே., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இளங்கலை முதலாமாண்டு துவக்க விழா, கல்லுாரி கலையரங்கில் நடந்தது. இ.ஆர்.கே., கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ் தொடக்கி வைத்தார்.
கல்லுாரி நிர்வாக இயக்குனர் சோழவேந்தன் முன்னிலை வகித்தார். முதல்வர் முனைவர் சக்தி தலைமை வகித்து பேசினார். முன்னதாக ஆங்கில துறைத்தலைவர் ரோபினா வரவேற்றார். தொடர்ந்து, வேலுார் வி.ஐ.டி., பல்கலைக்கழக இணை பேராசி-ரியர் முனைவர் விஜயகுமார் பேசுகையில், ''வாழ்க்கையின் வெற்-றிக்கு முக்கிய காரணமாக அமைவது கல்வி. எனவேழ கல்விக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். லட்சியம் என்பது வாழ்க்-கையில் மிகவும் முக்கியம். லட்சியம் இல்லாத வாழ்க்கை முகவரி இல்லாத கடிதம். லட்சியத்தை தீர்மானிக்க இதுவே சரியான தருணம். அனைவரும் தனக்கென ஒரு லட்சியத்தை தெரிவு செய்து, அதை நோக்கி பயணிக்க வேண்டும். மற்றும் இன்றைய தலைமுறையினர் சமூக ஊடகத்தால் கவரப்பட்டு வாழ்க்கையை சீரழித்து கொள்கின்றனர். மாறாக ஒவ்வொருவருக்கும் இதை பற்-றிய சீறிய அறிவும் தெளிவும் வேண்டும். கல்வியோடு ஒழுக்கத்-திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,'' என்றார்.
மேலும் இவ்விழாவில் கோபிநாதம்பட்டி காவல் ஆய்வாளர் லட்சுமி, இ.ஆர்.கே., மருந்தியல் கல்லுாரி முதல்வர் சிவகுமார், நிர்வாக அலுவலர் அருள்குமார், அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் அமுதா நன்றி கூறினார்.