/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதியுதவி இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதியுதவி
இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதியுதவி
இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதியுதவி
இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதியுதவி
ADDED : ஜூன் 22, 2025 01:15 AM
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த
வேப்பம்பட்டி பூதிநத்தத்தை சேர்ந்தவர் பாரதிராஜா.
இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஸ்டேஷனில் பணி
புரிந்து வந்தார். வழக்கு தொடர்பாக சென்னையில் சிலரை தேடி, ஆட்டோவில் சென்றபோது விபத்து ஏற்பட்டதில் தலையில் படுகாயமடைந்த பாரதிராஜா கடந்த, மார்ச், 5ல் உயிரிழந்தார்.
இவருடன் காவலர் பணியில் சேர்ந்த, 2010ம் ஆண்டு பேட்ச் சேர்ந்த, காக்கும் கரங்கள் காவலர்கள் சார்பாக, 16 லட்சத்து, 8,710 ரூபாய் நிதி திரட்டப்பட்டது.
தொடர்ந்து, நேற்று பாரதிராஜவின் வீட்டிற்கு வந்த காக்கும் கரங்கள் குழுவை சேர்ந்த போலீசார்,
பாரதிராஜாவின், 3 குழந்தைகளின் பெயரில்
வங்கியில் டிபாசிட் செய்யப்பட்ட, 12 லட்சம் ரூபாய்க்கான பத்திரம், பெற்றோருக்கு, 2 லட்சம் ரூபாய் மற்றும் பாரதிராஜா மனைவி கவிப்பிரியாவிற்கு, 2 லட்சத்து, 8,710 ரூபாய் வழங்கி
குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.