Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்லூரி ஆர்வத்தை ஏற்படுத்த களப்பயணம்

அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்லூரி ஆர்வத்தை ஏற்படுத்த களப்பயணம்

அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்லூரி ஆர்வத்தை ஏற்படுத்த களப்பயணம்

அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்லூரி ஆர்வத்தை ஏற்படுத்த களப்பயணம்

ADDED : ஜன 04, 2024 10:33 AM


Google News
தர்மபுரி: அரசு பள்ளி மாணவர்கள், அரசு கல்லுாரிகளில் படிக்கவும், அவர்களுக்கு கல்லுாரி ஆர்வத்தை ஏற்படுத்தவும் களப்பயண நிகழ்ச்சியை, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ஆகியவை இணைந்து, 2023 - -2024-ம் ஆண்டு, தர்மபுரி மாவட்டத்தில் உயர்கல்வியின் அவசியத்தை உணர்த்தவும், உயர்கல்வியை தொடர்ந்து படிக்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதில், தமிழக அரசால் தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 12- ம் வகுப்பு பயிலும் மாணவர்களை கல்லுாரிகளுக்கு அழைத்துச்சென்று கல்லுாரி ஆர்வமூட்டல் களப்பயணம் நிகழ்ச்சி, 3, 4, 5, மற்றும், 8 ஆகிய நாட்கள் நடக்கிறது.

இதில், 12-ம் வகுப்பு பயிலும், 107 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும், 3,745 மாணவர்களுக்கு உயர்கல்வி பயில ஆர்வமூட்ட, கல்லுாரி வளாகம் பல்வேறு துறைகள், வகுப்பறைகள், கலையரங்கம், நுாலகங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவை அறிந்து கொள்ள, களப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, நேற்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார். மாணவர்களை அழைத்துச் செல்ல பள்ளிக் கல்வித்துறையின் மூலமாக பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி, அரசு பொறியியல் கல்லுாரி, கலைக்கல்லுாரி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம், சட்டக்கல்லுாரி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்கின்றனர். நிகழ்ச்சியில், சி.இ.ஓ., ஜோதி

சந்திரா, பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் ரவிகுமார்

உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us