/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ இ.பி.எஸ்., பிறந்த நாள் கிரிக்கெட் போட்டி இ.பி.எஸ்., பிறந்த நாள் கிரிக்கெட் போட்டி
இ.பி.எஸ்., பிறந்த நாள் கிரிக்கெட் போட்டி
இ.பி.எஸ்., பிறந்த நாள் கிரிக்கெட் போட்டி
இ.பி.எஸ்., பிறந்த நாள் கிரிக்கெட் போட்டி
ADDED : மே 29, 2025 01:18 AM
அரூர், அ.தி.மு.க., பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான இ.பி.எஸ்., பிறந்த நாளையொட்டி, அரூர் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடந்தது. அரூர் தொகுதி அ.தி.மு.க.,சார்பில் நடந்த போட்டிக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி தலைமை வகித்தார். நகர செயலாளர் பாபு வரவேற்றார்.
அரூர் எம்.எல்.ஏ., சம்பத்குமார் போட்டியை துவக்கி வைத்தார். மூன்று நாட்கள் நடக்கும் இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக, 50,000, இரண்டாம் பரிசு, 30,000, மூன்றாம் பரிசு, 20,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. நிர்வாகிகள் சம்பத், சிவன், செல்வம், சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.