ADDED : ஜூன் 12, 2025 01:47 AM
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வேப்பம்பட்டியில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா, கடந்த, 5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் சிறப்பு பூஜை நடந்தது. 9ல் திரவுபதி அம்மன் திருக்கல்யாணம், 10ல் தீ மிதித்தல், அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான திரவுபதி அம்மன் தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இதில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், தேர் வடம்பிடித்து இழுத்தனர்.