/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு
ADDED : ஜூன் 12, 2025 01:46 AM
பாலக்கோடு, பாலக்கோடு அடுத்த சோமனஅள்ளி ஏரியில், வருவாய் மற்றும் தீயணைப்பு துறை சார்பில், தென்மேற்கு பருவ மழை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சோமனஅள்ளி ஏரியில், வருவாய் மற்றும் தீயணைப்பு துறை சார்பில், பொதுமக்களுக்கு தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, தாசில்தார் ரஜினி தலைமையில் நடந்தது.
இதில், தென்மேற்கு பருவமழையின்போது ஏற்படும் திடீர் வெள்ளத்தில், பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் சிக்கினால், அவர்களை எவ்வாறு மீட்பது என விளக்கப்பட்டது.
கிணறு, ஆறு மற்றும் ஏரிகளில் குளிக்கும்போது, தண்ணீரில் சிக்கினால் எவ்வாறு தப்பிப்பது, உடன் இருப்பவர்கள் நீரில் சிக்கி மூழ்கும் போது நீளமான குச்சி அல்லது கயிறு மூலம் அவர்களை மீட்பது, மரக்கட்டைகள், டியூப்கள், பிளாஸ்டிக் கேன்களை அவர்களின் அருகில் வீசுவது உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்து குறித்து, தீயணைப்பு வீரர்கள் பயிற்சி அளித்தனர். இதில், வருவாய்த்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.