/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சிறுவனை வேலைக்கு அமர்த்திய உரிமையாளர் மீது வழக்குப்பதிவு சிறுவனை வேலைக்கு அமர்த்திய உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
சிறுவனை வேலைக்கு அமர்த்திய உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
சிறுவனை வேலைக்கு அமர்த்திய உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
சிறுவனை வேலைக்கு அமர்த்திய உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
ADDED : செப் 12, 2025 01:52 AM
தர்மபுரி, சென்னை தொழிலாளர் ஆணையர் உத்தரவின் படி, தர்மபுரி மாவட்ட நீதிபதி தமயந்தி, சாந்தி, தொழிலாளர் ஆணைய துணை ஆய்வாளர் திவ்யா, உதவி ஆய்வாளர் தீபாபாரதி, முத்திரை ஆய்வாளர் விஜியலட்சுமி, இன்ஸ்பெக்டர் வேல், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வேல், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர் கார்த்திக் ஆகியோர் நேற்று முன்தினம், தர்மபுரி நகர பகுதிகளில் கூட்டாய்வு மேற்கொண்டனர்.
இதில், பழைய தர்மபுரி அருகே, தனியார் கார் வாட்டர் வாஷ் நிறுவனத்தில், ஆய்வு செய்தபோது அங்கு 17, வயது சிறுவன் கார் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டது தெரியவந்தது. சிறுவனை மீட்டு, குழந்தைகள் பாதுகாப்பு குழுமம் மூலம், குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, கார் வாட்டர் வாஷ் நிறுவனத்தின் உரிமையாளர் மீது, வழக்குப்பதிந்தனர்.
இது குறித்து, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜசேகர் தெரிவித்துள்ளதாவது:
குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின்படி, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 14 முதல், 18 வயது வரையிலான வளரிளம் பருவத்தினரை, எவ்வித தொழில்களிலும் ஈடுபடுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட விதிமுறைகளை மீறுவோருக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும், 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். எனவே, குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்த வேண்டாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.