/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ரூ-.1.50 லட்சம் மதிப்பிலான 100 கிலோ குட்கா பறிமுதல் ரூ-.1.50 லட்சம் மதிப்பிலான 100 கிலோ குட்கா பறிமுதல்
ரூ-.1.50 லட்சம் மதிப்பிலான 100 கிலோ குட்கா பறிமுதல்
ரூ-.1.50 லட்சம் மதிப்பிலான 100 கிலோ குட்கா பறிமுதல்
ரூ-.1.50 லட்சம் மதிப்பிலான 100 கிலோ குட்கா பறிமுதல்
ADDED : செப் 12, 2025 01:51 AM
காரிமங்கலம், காரிமங்கலம், தேசிய நெடுஞ்சாலையில் குட்கா பொருட்கள் கடத்தி செல்வதாக பாலக்கோடு டி.எஸ்.பி., மனோகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி, காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் எஸ்.ஐ.,க்கள் சுந்தரமூர்த்தி, ஆனந்தகுமார் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த ஸ்கார்பியோ காரை நிறுத்த முயற்சித்தனர். ஆனால் வாகனம் நிற்காமல் சென்றது. சந்தேகமடைந்த போலீசார், காரை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். ஸ்கார்பியோ காரை பறிமுதல் செய்து, சோதனையிட்டபோது அதில், 20க்கும் மேற்பட்ட மூட்டைகளில், 100 கிலோ அளவிற்கு, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் கடத்தியதும், காரில் இருந்தவர்கள் சேலம், செவ்வாய்பேட்டையை சேர்ந்த பிரசாந்த் மகோகர் சிங்க், 48 மற்றும் சூரமங்கலத்தை சேர்ந்த முரளி, 38 ஆகியோர் என தெரிந்தது. குட்காவை பறிமுதல் செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.