/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/நல்லம்பள்ளியில் மந்தகதியில் பாலப்பணிநல்லம்பள்ளியில் மந்தகதியில் பாலப்பணி
நல்லம்பள்ளியில் மந்தகதியில் பாலப்பணி
நல்லம்பள்ளியில் மந்தகதியில் பாலப்பணி
நல்லம்பள்ளியில் மந்தகதியில் பாலப்பணி
ADDED : ஜூன் 24, 2024 07:15 AM
நல்லம்பள்ளி : நல்லம்பள்ளியில் மந்தமாக நடக்கும் பணியால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.நல்லம்பள்ளி பஸ் ஸ்டாப்பில் இருந்து, லளிகம் செல்லும் சாலை வரை தர்மபுரி - சேலம் நெடுஞ்சாலையில், கடந்த மார்ச், 15 ல் சாலை பாதுகாப்பு மேம்பாட்டு நிதியில், கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்கு, 1.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இதில், மழைநீர் வெளியேறுவதற்கான சிறு பாலம் மற்றும் லளிகம் செல்லும் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இப்பணிகள் மந்தகதியில் நடப்பதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில், காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், மழைநீர் வெளியேறுவதற்காக பாலம் கட்ட தோண்டிய பள்ளத்தில், சாக்கடை நீர் வெளியேற வழியில்லாமல், தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவு நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுத்து, பாலம் பணிகளை விரைந்து முடிக்க, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.