/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சேதமாகி இடியும் கட்டடத்தில் அங்கன்வாடி மையம்சேதமாகி இடியும் கட்டடத்தில் அங்கன்வாடி மையம்
சேதமாகி இடியும் கட்டடத்தில் அங்கன்வாடி மையம்
சேதமாகி இடியும் கட்டடத்தில் அங்கன்வாடி மையம்
சேதமாகி இடியும் கட்டடத்தில் அங்கன்வாடி மையம்
ADDED : ஜூன் 24, 2024 07:15 AM
பாப்பிரெட்டிப்பட்டி : தர்மபுரி மாவட்டம், கடத்துார் ஒன்றியத்தில், 36 அங்கன்வாடி மையங்கள் இயங்குகின்றன.
கடத்துாரில் அரூர் மெயின் ரோடு, தொடக்கப்பள்ளி வளாகம், காந்தி நகர் மையம் என, 3 மையங்களில், 65 குழந்தைகள் படிக்கின்றனர். இதில், தொடக்கப்பள்ளி வளாகத்திலுள்ள மையத்தின் கட்டடம் சேதமாகி, மழைநீர் ஒழுகி, குழந்தைகள் தங்க முடியாத நிலை உள்ளது. பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்துள்ளன. இதேபோல, காந்தி நகர் மையத்தில் கடந்த, 10 ஆண்டுகளாக கட்டட வசதி இல்லாததால், வாடகை கட்டடங்களில் இயங்கி வந்தது. வாடகை செலுத்த முடியாத நிலையில், தற்போது சேதமாகி இருக்கும், அரசு மருத்துவமனை ஊழியர் குடியிருப்பில் இயங்கி வருகிறது. ஓராண்டாக ஆசிரியையும் இல்லை. சமையலரே, ஆசிரியை பணியையும் கவனித்து வருகிறார். குழந்தைகளின் நலன் கருதி பெரும்பாலான பெற்றோர்கள் இம்மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப தயங்குகின்றனர். இங்கு அடிப்படை வசதிகள் இல்லாததால், பல்வேறு இன்னல்களுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். இந்த கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டு, எந்நேரமும் கீழே விழும் அபாயம் உள்ளது. முட்புதர்கள் சூழ்ந்துள்ளதால், விஷ ஜந்துக்கள் உலா வருகிறது. அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ கண்டு கொள்ளாததால், இடிந்து விழும் நிலையிலுள்ள கட்டடத்தில், குழந்தைகள் மையம் இயங்கி வருகிறது. எனவே, இந்த அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்ட பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.