ADDED : ஜூலை 09, 2024 06:03 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தேவராஜ் பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ், 42.
தர்மபுரியிலுள்ள தனியார் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, தேவராஜ் பாளையத்திலுள்ள தன் மளிகை கடையில் இருந்தார். அப்போது பே.தாதம்பட்டியை சேர்ந்த மதன், 19 என்பவர், குடி போதையில் உடைந்த மது பாட்டிலுடன் வந்து சிகரெட் கேட்டார். மறுத்த வெங்கடேஷை மது பாட்டிலால் நெற்றியில் குத்தியுள்ளார். தொடர்ந்து பைக்கில் வந்த அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன், 38, என்பவரிடம் தகராறில் ஈடுபட்டு அவரின் தலையிலும் பாட்டிலால் மதன் குத்தியுள்ளார். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் தப்பியோடிய மதனை தேடி வருகின்றனர்.