கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 09, 2024 06:03 AM
தர்மபுரி: தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில், 128 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று கல்லுாரி முன் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி கடந்த, 2019ம் ஆண்டு முதல் மாதம், 50,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பை வழங்க வேண்டும். கவுரவ விரிவுரையாளராக பணிபுரிந்து, 60 வயது வரை பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியமாக ஒரு குறிப்பிட்ட தொகை வழங்க வேண்டும். பணி செய்த காலங்களில் உயிரிழந்த கவுரவ விரிவுரையாளர்களுக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும்.
யு.ஜி.சி., நிர்ணயித்த மாத ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். அரசாணை எண், 56ஐ அமல்படுத்த வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஒதுக்கீடாக, 4 சதவீதம் வழங்க வேண்டும். மேலும், நிலுவையிலுள்ள, 4 மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.