/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான வங்கிக்கடன் வழி காட்டுதல் முகாம்சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான வங்கிக்கடன் வழி காட்டுதல் முகாம்
சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான வங்கிக்கடன் வழி காட்டுதல் முகாம்
சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான வங்கிக்கடன் வழி காட்டுதல் முகாம்
சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான வங்கிக்கடன் வழி காட்டுதல் முகாம்
ADDED : பிப் 24, 2024 03:51 AM
தர்மபுரி: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான, மாவட்ட அளவில் வங்கிக்கடன் வழிகாட்டுதல் முகாம், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பால்
பிரின்ஸ்லி ராஜ்குமார் தலைமையில் நேற்று நடந்தது.
தமிழ்நாடு அரசு, புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க, மானியத்துடன் சுயதொழில் கடன் திட்டங்களை, மாவட்ட தொழில் மையம் மற்றும் பிற அரசு துறைகள் மூலமாக செயல்படுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்க ஆர்வமுடைய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க தேவையான கடன் வசதியினை, வங்கிகள் மூலம் ஏற்படுத்தி தரும் வகையில் மாவட்ட அளவிலான, வங்கிக்கடன் வழிகாட்டுதல் முகாம் நடந்தது.
மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிர் திட்டம், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் போன்ற துறைகள் அனைத்து வங்கிகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும் அரசு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களில் விண்ணப்பித்து, வங்கிகள் மூலம், மானியத்துடன் கடன்கள் பெற்று, சுயமாக தொழில்கள் துவங்க டி.ஆர்.ஓ., கேட்டுக்கொண்டார்.
முகாமில் தொழில் கடன் திட்டத்தில், 39 பயனாளிகளுக்கு, 9.17 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தர்மபுரி மாவட்டத்தில் இரண்டு மாதத்தில், 1,018 பயனாளிகள், 58.77 கோடி ரூபாய் தொழிற்கடன் உதவி பெற்றுள்ளனர்.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகைவாசன், பழங்குடியினர் நலத்துறை திட்ட அலுவலர் கண்ணன், தாட்கோ மாவட்ட மேலாளர் எட்வர்ட் ஸ்டீபன், நெல் அரவை முகவர் சங்க தலைவர் பாஸ்கரன், வணிகர் சங்க தலைவர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.